பக்கம்:பாவியக் கொத்து.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

குழப்பம் என்றன் அறிவைக் குடைந்ததே! இழப்பதோ இரவை? என்னென் முகிலும் 'நாமே கேட்போம்” என்று நயந்து'நாமே உள்ளோம்: நமக்குள் பிரிவிலை! 270 கயல்விழி! நானுன் கணவன் என்பதற்(கு) இயைந்ததும், உள்ளம் ஏற்றதும் உண்மையின் உன்னே வருத்திய துன்பம் உரைப்பாய்; என்ன வேறென்(று) எண்ணின் மறுப்பாய்” என்று கூறியவ் வெழில்முகந் திருப்பினேன்.

ஒன்ருென் ருென்றென. உதிர்ந்தது கண்ணிர்! பின்றும் பேசினேன்; 'பேதைப் பெண்,நீ! இன்னும் அழுவதால் எனக்கு விளங்குமோ? இங்குப் பார்என; என்னைப் பிடித்ததா? தங்கு வாழ்வில் தனித்துணை யாக 280 இருப்பேன் என்கிறேன்; இல்லையென் பாயா? விருப்ப மிலாமல் மணந்து விட்டனே என்று நினைக்கின்றேன்; இல்லையென் பாயா? நன்று விண்டிட வேண்டும்; நாணமேன்? இன்னும் நானுனே இம்மியும் தீண்டிலேன். என்னை வெறுப்பையேல், இதோ,இந் நொடியே உன்னேக் கவர்ந்த ஒருவன அழைத்து நின்னே அவனெடு நீள்நகர் அனுப்பி, வாழ்வை உனக்கு வகுத்துக் கொடுத்(து) உன் தாழ்வைப் போக்குவேன்; தடையில்ா தென்க் 290 நம்பி யுரைப்பாய்” என்று நவின்றதும் வெம்பும் நெஞ்சம் வெடித்தது போலக் கீழ்வரு மாறு கிடுகிடு வென்று பாழுரை செய்தாள் என்னெனப் பகர்வேன்?

22