பக்கம்:பாவியக் கொத்து.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பாவியக்கொத்து

"அத்தான்!-இப்படி உங்களை அழைக்க ஒத்திலை உள்ளம்; எனினும் நீங்கள் துன்புறத் தாளேன்; அதனல் துணிந்துளேன்: இன்புறும் நினேவொடு இத்திரு மணத்திற்(கு) ஒப்பிடவில்லை என் உள்ளம்; என்னைக் கப்பி இருக்கும் கடும்புயல் நினைவை 器伊莎 என்முன் விரிந்துள இவ்வை யத்துள் நன்மனங் கொண்டொரு நல்லவர் பால்யான் சொல்லத் துடித்தேன்; சொல்லி என்னுயிர் கொல்லத் துணிந்தேன்; அத்தான், உங்களை அருளும் அறிவும் உள்ளவர் என்று பெரியோ ரெல்லாம் பேசிக் கொண்டதைக் கேட்டு வியந்ததால் எனக்கேட் டவர்க்குக் "கூட்டுவீர் மணத்தை" என்றுரை கொடுத்தேன். உள்ளத் துணர்வெலாம் உங்களின் முன்னே வெள்ளப் பெருக்கென விரித்திடத் துணிந்தேன். 320 நெஞ்சை இறுக்கிய நிகழ்ச்சியைச் சொன்னதும் எஞ்சும் என்னுயிர் ஏகிடும் அத்தான்!

வாய்மையும் அன்பும் உங்கள் வழியெனின், தூய்மையே உங்கள் துணையெனின், அத்தான் என்னைப் பொறுப்பீர், என்னைப் பொறுப்பீர்! 'உன்னைப் பொறுத்தேன்" எனுமொரு சொல்லே மண்ணில் பிறந்து மாண்பினை யிழந்த,யிப் பெண்ணின் பிறப்பைப் பீழையின் ருக்கும்! வேண்டு கின்றேன். அத்தான்" என்று மாண்ட கண்ணகி மீண்டாள் போலப் 3多鲁 பொருமிளுள்; நெஞ்சு புழுங்கிள்ை; எனக்கண் டுருகிளுள் மேலும் உரைப்பா ளாயினள்: