பக்கம்:பாவியக் கொத்து.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بليو دبليو إي அந்திப்பூ

"ஐயகோ அத்தான் அழிந்திலாப் பேதை 
வெய்ய கொடுமை விளைத்தேன்; உங்கள் 
வாழ்வைக் கெடுத்தேன்; எனினும் சிறந்த 
வாழ்வைக் கொடுப்பேன்; எனைவை யாதீர்; 
எந்தப் பெண்ணை இனியளென் றீரோ, 
எந்தப் பெண்ணை ஏற்றுவந் தீரோ, 
எவளை மனைவியென் றிறுமாந் தீரோ, 
எவளைத் துணையென எண்ணிநின் றீரோ          330
யாரைத் தழுவிட ஏங்கிநின் றீரோ, 
யாரைப் புரையிலா ளென்றிருந் தீரோ, 
அந்த ஒருத்தி, ஜயகோ அத்தான், 
வெந்த உளத்தவள், வேறொரு தீயனால் 
உண்ணப் பட்டவள்; ஐயகோ உலகமே! 
உண்ணப் பட்டவள்; உரங்கெட் டவளே!"
என்றனள்; என்றனள்; என்றுயிர் தன்னைக் 
கொன்றனள்: கொன்றனள்; கூற்றமாய் என்முன் 
நின்றனள்; நின்றனள்; நெஞ்சைப் பிசைந்து 
தின்றனள்; தின்றனள்; தீயினுங் கொடியளே!       340



                                                             24