பக்கம்:பாவியக் கொத்து.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

4

மயக்கம் தெளிந்தது மணஞ்செய லற்றதே. இயக்கம் இன்றி எழாமற் புரண்டேன். பச்சைக் கொடியாய்ப் பசுங்கிளிக குஞ்சாய் அச்சுப் பாவையாய் அவள்கிடந் தாளே!

நெஞ்சம் இறுக்கிய நிகழ்ச்சியைச் சொன்னதும் எஞ்சும் என்னுயிர் ஏகிடும் அத்தான்’ என்று,அவள் கூறிய(து) எண்ணினேன் எழுந்தேன்; நின்றேன்; உன்னினேன்; நெருங்கினேன்: வாழ்வைக் கருதினேன்! தொட்டிடக் கைநீட் டும் முன் உறுதி பூண்டேன்; ஒருநொடி தயங்கி 器葛份 வருவது தீங்கே என்னினும் வருகென இருகை நீட்டி ஏந்திழை யாளேத் தூக்கிக் கிடத்தினேன் தூமலர்ப் படுக்கையில்: தேக்கிய அருளால் நெஞ்சம் திகழ்ந்ததே! நீரைத் தெளித்தேன் நீள்விழி மலர்ந்தாள். தாரையாய்க் கண்ணிர் வழிந்திடத் தளிர்க்கொடி எழுந்தாள்; எழுந்தே என்னடி வந்து விழுந்தாள்; விழுந்து வெம்பினள்; புழுங்கிள்ை: கண்களில் எனக்கும் கசிந்தது கண்ணிர்! பெண்களின் கொடுமையைப் பேசநாத் துடித்ததே,

அவளே தொடர்ந்தாள்; அத்தான் ஒன்றும் கவலைப் படாதீர்; கண்ணிமைப் பொழுதே எனினும் உங்களோ டிருந்த வாழ்க்கையே இனியது முழுச்சிறப் பேற்றதே! இனிஎனத்

25