பக்கம்:பாவியக் கொத்து.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

இளஞா யிற்ருெளி எழுமுன் எழுந்த இளைஞர் பேச்சொலி எம்செவி படவே பிரிய நேர்ந்தது! பிணைப்பிலா நீங்கிளுேம். அரிய முதலி.ரா, ஆயினும் உளத்தால் ஒன்றினுேம்; எனினும், உடலால் ஒன்றிலோம்: அன்றிரா போகி அடுத்த இரவினுக் 450 கேங்கி இருந்தாள்: ஏதோ ஒருதுயர் தாங்கி இருந்ததென் தணிவிலா நெஞ்சம்;

காலே எழுந்ததும் கண்ணுடி நாடி மாலை யிருந்த முகத்தையும், மங்கை சிதைத்த பின்றைச் சிவந்த முகத்தையும் பதைத்த நெஞ்சொடு பார்த்து நீர் வடித்தேன்.

(வேறு) நான்பெற்ற வாழ்வின் நலிவை நினைந்துநினைந் தேன்பெற்ருய் அன்னையே என்றே துடித்தழுதேன்! என்னை யறியாமல் என்னுள்ளம் நொந்ததுவால்! பின்னே ஒருவரொடும் பேசாமல் ஆங்கிருந்தேன். 460 புன்னைச் சிறுசிட்டாய்ப் பூரிப்பில் மூழ்குவதும், என்னை ஒருமுறை வந் தேறெடுத்துப் பார்ப்பதுவும், முத்துநகை சிந்துவதும் மொய்குழலைப் பின்னுவதும், பித்தந் தலைக்கேறிப் பின்னுமவள் ஏதேதோ சொல்லுவதும், நெற்றிச் சுருள்மயிரின் கீழ்விழியாற் கொல்லுவது மாகக் கயல்விழியாள் மேவுகையில் தந்த தொலைவரியைத் தாவியவள் வாங்கிவந்தாள். “வந்திருப்பாய் வண்டி நிலையத்தில்: நான்வருவேன்’ என்று விடுத்திருந்தான் என்நண்பன் முத்தப்பன். நன்றென் றெழுந்தேனே நான்! 476,

29