பக்கம்:பாவியக் கொத்து.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்திப்பூ

காக்கத்தான்; கற்பைக் கழற்றியவட் கும்வாழ்க்கை பூக்கத்தான்; அன்பைப் புதுக்கத் தான்; பேரின்பம் சேர்க்கத்தான்; உள்ளம் சிறுத்தார்க்கும் நல்வாழ்வ்ை வார்க்கத்தான்; மன்னித்தால் வாழ்வுபெரு ளாவென்றே பார்க்கத்தான்; பொய்சொல்லிப் பாவையினை

வாழவைத்தேன்,'

என்றழுது கூற, எழுந்தவனும் என்காலில் நின்ற நெடுமரம்போல் நீட்டி விழுந்தழுதே "என்னை நீ மன்னிப்பாய் மன்னிப்பாய் என்நண்பா, 530 பொன்னே-மணிச்சுடரை-பொற்புள்ள மங்கையினை, வாய்த்த குலக்கொடியை-வந்தினைந்த நல்லமிழ்தைமாய்த்துச் சிதைத்தவன் யான்;மாளா திருந்தவன்யான்" என்ருனே; நெஞ்சம் எரிபற்றி வெந்ததுவால்!கொன்ருலும் அன்ன கொடியவனைத் தீதில்லை! என்று நினைந்தே இருகையா 'லும் அறைந்தேன்; ஒன்ருென்ருய் எண்ணு தொருநூறு தந்திருப்பேன்.

ஊழிப்புயலில் உலகஞ் சுழல்வது போல் ஆழி பெருகி அலைபுரண்டு சீறுவதாய், என்கண்கள் மயங்கினவே! என்றுமிலா வல்லிருளில் என்னைக்கொண் டுழ்த்தியன; மீண்டும் எழுநினைவால் கண்விழித்துப் பார்க்கக் கடுங்குளிரில், வெம்பனியில், விண்ணில், நடுங்கி வெலவெலத்துப் போனவன் போல்: வீழ்ந்து கிடந்தான்; விளைந்த தறிந்தெழுந்தான், ஆழ்ந்து நினைந்தேன்; அறுந்த நினைவொருங்கே கூடுமோ? இன்னவரைக் கூறி வருத்துவதால், நீடுமோ வாழ்க்கை? எனவே நினைத்(து):அவன்பால்,

32