பக்கம்:பாவியக் கொத்து.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

பாவியக்கொத்து

‘முத்தப்பா, வாழ்க்கை முழுமை உறுவதெல்லாம் ஒத்தநெறிக் கொத்த உளம், ஒத்தசெயல் என்பவற்ருல்! இம்மி இழிந்தாலும் மாந்தனென்று கூறுவதும் 55う அம்மிக்குழவியென் ருவதுவும் ஒன்றே!

பொறுத்தேன் இறப்பினை என்றும் அதனை மறந்தேன்; இனியுன்னை மன்னித்தேன்; வாபோவோம்! என்மனைவி காத்திருப்பாள்; என்றனுக்கும் உன்றனுக்கும் நன்விருந்து செய்திருப்பாள்’ என்று நவின்றழைத்தேன், கண்ணிரண்டில் நீர் பெருகக், கைகூப்பி நாத் தழுக்கப் 'புண்ணில்வே லிட்டதுபோல் பின்னும்பே சாதே! இறைவன் எனக்கில்லை; இல்லையவன் எங்கும்; இறைவன் நீ; நீயே எனக்கு வழிகாட்டி! அடிவீழ்ந்து செஞ்சுகின்றேன்; அன்பா! அருளோய்! குடியழித்த இந்தக் கொடியவனை விட்டுவிடு! வாடிக் குலைந்திருக்கும் வல்லாள் உளமகிழ ஒடித் தழுவிடுநீ! என்னே உதறிவிடு! தித்தித்த நெஞ்சுணர்வால் தீயதையும் மன்னிப்போர் அத்திப்பூப் போல அறியார்க் கறியாராய் வல்லார் ஒருசிலரும் வாழ்கின் ருர் இவ்வுலகில்! அல்லார் அவரை அறிவதில்லை; அன்பரசே! வாழ்கநீ' என்றுரைத்து வந்த வழிநடந்தான்.

வீழ்கின்ற கண்ணிர் விழிமல்கப் பார்த்திருந்து விடுவந்து சேர்ந்தேன்; விழியால் வழிகாண்பாள் 570 ஓடிவந்து பூத்த ஒளிர்முகத்தில் அன்பு குடியிருக்கக் கண்டேன்; குலைகுலையாய் இன்பம் மடியிருக்கக் கண்டேன் மகிழ்ந்து.