பக்கம்:பாவியக் கொத்து.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- முன்னுரை (அறிவு தழுவாத வெற்றுணர்ச்சிக்கு அடிமைப் பட்டுச் சுழலும் உள் ள ம், உறுதியில்லாமல் பொது பொது வென்றிருக்கும் குப்பைப் புழுதிக்கு ஒப்பாகும். எப்பொழுதாவது பொழியும் உணர்ச்சி மழையினுல் அங்கு முளைக்கின்ற காளாம்பிகள் பிறர்க்கு அருவருப்பையும், ஏ ளன த் ைத யும் உண்டு பண்ணுகின்றன. வேரற்ற அவ்வெற்றுணர்வு நிகழ்ச்சிகள் திடீரென வெழுந்து கின்று சிறுபொழுது மாந்தனே ஆட்டிப் படைத்து உடனே மறைந்து விடுவன வெனினும், அவை மற்றவர்பால் ஒருவர்க்கு மாருக் கறை யைப் பதிக்கின்றன. சிறிது நேரமே எழுந்து நிற்கும் அவ் வெற்றுணர்ச்சிகள் குப்பைமேட்டுக் காளாம்பிகளைப் போல் பூப்பதுமில்லை; காய்ப்பது மில்லை; சிம்பும் கொம்பும், தளிரும், தழையும் விட்டுப் படர்வதுமில்லை. அந்தச் சிறு கேரத்து வெற்றுணர்வுக் காளாம்பிகளைப் பிடுங்கியயெறிய வல்ல அறிவாற்றல் உள்ளவர், என்றும் சிறந்த ஒழுக்கமுடையவராய் இருப்பது திண்ணம். சூழ்நிலை யென்னும் கார்முகிற் கூட்டம், வாயப்பு என்னும் குளிர்காற்றைத் தீண்டி, வெற்றுணர்ச்சி மழையைப் பொழிவிக்கும் பொழுது, வன்மையற் றிருப்பார்தம் உள் ள கிலத்தில் தீய எண்ணம் எ ன் ற காளாம்பிகளைத் தோற்றுவிக்கின்றன. இத்தகைய காளாம்பிகளை முளையிற் கிள்ளி யெறி வோர், அவ் வெற்றுணர்வுக் கனலவிந்து, அறி வுப் புனல் சிலிர்க்குங் காலை, தாம் செய்யவிருந்த தீய செயற்கு மிகவருந்துவதும், அவ்வாறு செய்யாமற்றப்பி ஒழுக்கத்தைக் காத்தமைக்கு உவப்பதும் கண்கூடாகக் காண்கின்ருேம். அத் தகைய வெற்றுணர்ச்சிக்குப் பழு தா. க | ம ல் ஒழுக்கங் காப்பார் உயர்ந்தோராவார். மற்றை யோர் விலங்குகளே ஆவார்.