பக்கம்:பாவியக் கொத்து.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. காளாம்பி (1988)

ஏந்திய நெஞ்சன்: இளங்கதிர் முகத்தன்! நீந்திய கருவிழி, காந்திய நோக்கினன்! எடுத்த மூக்கினன் எழில்மலர் வாயினன்! தொடுத்த முத்தெனத் தோன்றிய பல்லினன்! வீங்கிய தோளான் வீழிருங் கையான்! தேங்கிய அழகெலாந் திரண்ட உருவிலோர்க் கட்டிளங் காளேயன் ஒருவன், கலையெனும் மட்டிலா உவகை மாந்திய வாழ்வினன். வெள்ளி நிலவொளி வீழ்த்திய குளிரில் நள்ளிராப் பொழுதில் நன்னடை பயின்றே I # அண்டையில் உள்ள அழகிய புகைத்தொடர் வண்டி நிலையம் வந்துநின் றிருந்த படுங்கிடை வண்டியைப் பற்றியுட் சென்றே இடங்கண் டமர்ந்தான்; இரைந்தது வண்டி!

35