பக்கம்:பாவியக் கொத்து.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

முன்னல் ஒருத்தி மொய்த்த எழிலொடும், சின்ன மகவின் சிறுதலே அனைத்த வகையொடும், புன்னகை வனைந்த வாயொடும் முகைவிழி மூடி, முழுவுடற் கிடத்தி, அறுவர் அமரும் அகலப் பலகையில் ஒருவர்க் கமர இடம் ஒதுக்காமல் தூங்கி யிருந்தாள் தோகையின் முன்னே தாங்கிய கைமேல் தலையினைச் சாய்த்தே உறங்கினர் ஒருவர். உள்ளிருந் தெவரும் இறங்க வேண்டுதல் இல்லா மையினுல் அவரவர் அமர்ந்தே அயர்ந்து துரங்கினர். இவர்தம் நடுவில் இமைமூ டாமல், முன்னல் இருக்கும் முத்துப் பாவையை உன்னி உன்னி உருக்குலைந் திருக்க மன்னிய நினைவால் மலைப்பொன் றெய்தினுன் 器等 பின்னல் வந்த பெருங்கலை நெஞ்சன்!

ஒடிய வண்டியின் உரத்த ஊதலும், ஆடிய ஆட்டமும் அதன்மருங் குறங்கிய மகவை எழுப்ப, மங்கையும் விழித்துத் தகவோ டணத்துத் தலைநிமிர்ந் திடவே, முன்னல் அமர்ந்து மொய்விழி நோகத் தன்னைப் பார்க்கும் தனியனைக் கண்டாள் கண்டதும் பாம்பைக் கண்டது போலப் பண்டை நிகழ்ச்சி பாவையை உலுக்க நெஞ்சு பதைத்தாள்! நெட்டுயிர்ப் புற்ருள்! அஞ்சு மடமான் அரிமா முன்னம் 40 உடல்நடுங் கிடல்போல் உயிர்நடுங் கினளே! அடலே றவனும் ஆழ்ந்துளம் உன்னத் தொன்மை நினைவு பற்பல தோன்றி. முன்னே நிகழ்வில் மூழ்க்கி யெடுத்ததோ

36