பக்கம்:பாவியக் கொத்து.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

பாவியக்கொத்து

அவ்விதழ் பருக அவற்குத் தந்ததும் நீட்டிய கையில் மலர் நிறைக் காது காட்டு மல்லிகை குழலில் வைத்ததும், கருமுகில் புதையும் கவின்நிலா வென அவள் திருமுகம் புதைத்தவன் திருமடி புரண்டதும், ஒடிய புனலில் ஒண்டொடி யோடே ஆடிய வகையும் அவள்தலே பற்றி உள்ளே மூழ்க்கி உடன்நீர் புகுந்ததும், வெள்ளத் தவள்செல. விரைந்து மீட்டதும், 善● தங்கைக் கன்னை தந்ததைக் கவர்ந்து மங்கைக் கணித்த மணிமுத் தலங்கல் இன்னும் கழுத்தினின் றிறங்கா திருப்பதும், பொன்னந் தாலியொன் றதனெடு பொலிவதும், ஆடியும் பாடியும் அன்பை வளர்த்ததும், ஒடிய காலத் துறும்பிசி வாலும் பொல்லா மாந்தர் புலநெஞ் சாலும் கல்லாப் பெற்ருேர் கருத்திழப் பாலும்,

ஒருகுல இருகனி, ஒருநோக் கிருவிழி, ஒருசெயல் இருமனம், ஒருயிர் ஈருடல், § {} பிரிக்கப் பட்டதும், பிரிவெனும் உரவில் நெரிக்கப் பட்டதும், நினைவெனும் புனலில் சிக்கித் தவித்ததும், காதல் சிதைத்ததும், மட்கிய நினைவுகள் மலர்ந்து மீண்டதும், எண்ணி எண்ணி யிருவரும் நினைவறக் கண்ணனீர் உகுக்க, காதகம் கனல, தொண்டை வரள, தொன்மை உணர்வெழ அண்டைச் சூழலை அடியொடு மறந்தே ஒருவர் விழிகளை ஒருவர் கவ்வி ஒருவர் உணர்வை ஒருவருக் குணர்த்தி, 蟹鲁爵