பக்கம்:பாவியக் கொத்து.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காளாம்பி

அவிந்த தீயெழுத் தாடிய வகையாய்க் குவிந்த அமைதியில் உள்ளங் கூடிட, விரும்புவ ளென்றும், விரும்பியப் பக்கந் திரும்புவ ளென்றும், திரும்பியோர் புன்னகை அரும்புவ ளென்றும், அணுகுவள் என்றும், கரும்பவள் தனக்கினி என்றும் கருதி,

உயிர்தீப் பற்ற உளந்தீப் பற்ற மயர்வறி யாமல் மனந்தவள் என்ற நினைவறி யாமல், நிலையறி யாமல், வினையறி யாமல், விளைவறி யாமல் 1 0 உறுத்து நோக்கியவ் வொண்டொடி உளத்தையும் அறுத்தறுத் தெறிந்திட, அக்கொடி யாளும்,

முன்னர் தனக்கவன் முகமலர் உவந்ததும், புன்னகை தந்தவன் புன்னகை பெற்றதும் நீட்டிய கைகளில் நிலையிலா தோடிக் கூட்டி லடைபடும் குருவிக் குஞ்சென அடைப்பட் டிருந்ததும், அதனால் மகிழ்ந்ததும், இடைப்பட் டிருந்த இடர்களே எதிர்த்ததும், குன்றுபோல் தன்னில் தன்முகம் குழைந்தவள் மென்ருேள் கனப்பின் மிசையவன் துயின்றதும் 120

பாலிற் பிசைந்த பைங்கொழு வடிசில் வேலி மருங்கில் வீற்றவற் கீந்ததும், ஆற்றுப் படுக்கையில் அவன்காத் திருக்கச் சோற்றை இலையோடு சுருட்டி மறைத்தே அன்னை உணரா ததனே எறிந்ததும்,

39