பக்கம்:பாவியக் கொத்து.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

பின்னை யவனிடம் ஒடிப் பிணைந்ததும், மறப்பா யோவன மறித்துக் கேட்டவற் கிறப்பே னென்றவள் இளங்கை யடித்ததும் 'தடுத்தார் பெற்றவர்; தனைவாழாது கெடுத்தார்’ என்று கிளத்தி நொந்ததும் 1 50 வீட்டுக் குள்ளறை விட்டவள் அன்னை கூட்டுக் கிளியெனக் கொடுஞ்சிறை காத்ததும், வந்தவன் ஒருவன் தன்னெடு வாழெனத் தந்தள்ள் கழுத்தில் தாவியேற் றியதும் தன்னை விழைந்தவன் தன்னை மறந்து தன்னை மணந்தவன் தன்னை விழைந்து வாழ்வதைத் தவிர வழிவே றின்றென

ஆழ்ந்துணர்ந் ததன்படி அதுவரை வாழ்ந்ததும், இறந்தா னென்றே எண்ணி யிருந்ததும், பிறந்தான் போலவன் பின்னை வந்ததும், 140 முனையுரி மையினல் மூண்டெழுந் துள்ளம்

தனையறி யாமல் தவியாய்த் தவிப்பதும், முன்னி நெஞ்சினில் முன்னிகழ் வெல்லாம் மின்னித் தோன்றிட மேனி கணப்ப இழந்ததைக் கண்ட இரப்பா ளன்போல் குழந்தை அரற்றுங் கூக்குரல் மறந்தும், கண்முன் உறங்கும் கணவனை மறந்தும், பெண்முன் னிற்கும் பெரும்பழி மறந்தும் அற்றைநாட் பழகிய அன்னவன் முகத்தை, உற்றுப் பார்ப்பதும் உயிர்த்தலும் உணர்வெனும் 150 எரிமூண் டெரிய எண்ணெய் விடல்போல் விரிந்த பார்வையில் விளைந்த நினைவால், அறிவு சுருங்கி அகமிகச் சுருங்கி வெறியுணர் வெழும்ப, வெயர்வுடல் அரும்ப, தன்னை மறந்துயிர் தளர்வுற் றிருத்தாள் :

40