பக்கம்:பாவியக் கொத்து.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

காளாம்பி

என்னை இயம்புவ தென்றவள் எண்ணி, நாத்துடி துடிப்ப, நடுங்கிட நெஞ்சு, காத்த ஒழுங்கு கழன்றுயிர் அலேய, அவளுளம் உள்ளிய ஆயிரஞ் சொற்களில் தவறியு மொருசொல் தந்தா வுரையா(து) 16 0 குரல்வளை நடுங்கக் குமைந்தவன் றனக்கு விரல்நெளி வாலே விழைவிகின உணர்த்த எண்ணினள்: கைகள் இரும்பாய்க் கனத்தன. திண்ணின விரல்கள்; திகைத்து நின்றனள்.

பேசத் துடித்தது பேதையின் பழவாய்! ஊசல் மூச்சும் ஒடுங்குவ தல்லால், சொல்வர வில்லை; சுடர்மின் னென்று வல்நெஞ் சொளிர, வல்லுனர் வொடுங்கிடச்

சென்ற வண்டியிற் பட்டுச் சிதைந்த தென்றற் காற்ருல் தெரிவையின் முகத்தில் 170 வரவரத் தெளிவு வளர்ந்ததும் உள்ளம் பரபரப் படங்கிப், பாலுக் கழுதே, இமைகள் மூடி இளமக வுறங்க தமைமறந் தந்தத் தாய்முலே ஊறி, நெஞ்சம் நனைப்ப, நெடுந்துயில் நீங்கி, அஞ்சிய மடக்கொடி அறிவு தெளிவுற,

ஒருநொடி அவிந்த உள்ளுணர் வெழுந்தே ஒருகொடு நினைவை ஊட்டி மறைந்த நிகழ்வை எண்ணவும் நேரிழை அஞ்சி இகழ்வா ளாயினள் இளமையை அக்கால், 180