பக்கம்:பாவியக் கொத்து.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருடர் காதல்

முன்னுரை.

'காதலே குருட்டுத்தனமானது, (Love is Blind -என்பர் ஆங்கிலப் பெரும்புலவர் சேக்சு பியர். காதலுக்கு விழியைவிட மொழியும் உள்ள வுணர்வுமே தேவையானவை. விழி அழகில் மொய்க்கும்; உள்ளத்தைச் சுவைப்பதில்லை, உணர்வே உள்ளத்தைச் சுவைப்பது; வருடுவது; அதில் புதைவது; அதைத் தன்வயப் படுத்துவது. ஒளிவண்ணங்களை உணராத குருடரும் உள்ள வண்ணங்களை உணர்கின்றனர். ஒருவர் உள்ளத் தில் ஒருவர் ஊடுருவுகின்றனர். ஒருவர்க்கொரு வர் ஒளியேற்றுகின்றனர். அங்குக் காதல் மட்டு மன்று; கனிவும் மலர்கின்றது; கருத்தும் காய்க் கின்றது; இன்பமும் கணிகின்றது. விழியுள்ளவர் உடல்வழி உள்ளத்தை கெருங்குகின்றனர். விழி யற்றவர் உள்ளத்தின்வழி உடலைச் சுவைக்கின் றனர். அக்கால் அவர் உடல் அணுக்கள் முழு வதும் விழிகளாகி ஒளி வீசல்களை அறிகின்றன. இளைஞனும் இளைஞையுமாகிய குருடர் இருவர் தம்முள் எழுந்த காதலுணர்வைச் சொற்களால் பரிமாறிக் கொள்ளும் உணர்வைப் பாவுணர்வு கண்டு சுவைக்கின்றது. அவர்கள்முன் காம் காணும் நீல வானும், கீனிலமும், கோலநிலவும் பன்மடங்கு ஒளிவீசல்களை உண்டாக்கி, அவர் தம் காதல் உணர்வுக்குக் காட்சிப் பொருளாகி கிற்கின்றன. பருவுனர்வால் கைவரப்பெறும் கம் காதலுணர்வினும் அவர்களின் காதலுணர்வு மெய்ப்பொருள் கிரம்பியதாகத் தோற்றமளிக் கின்றது..... }