பக்கம்:பாவியக் கொத்து.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. குருடர் காதல் 1955)

பகல் விளக்கி ஓய்ந்த பழம்பரிதி மாய, அகல் விளக்கம் எங்கும் அரசாகி நிற்கும்! ஒளியறியான் இன்ப உலகுணரான், காட்சி, துளியறியாப் பேதையோர் தொல்குருடன், என்றும் வழக்கம்போல் சாவடியை வந்தடைந்து, தான்போய்ப் பழக்கமாய்த் தங்கிப் படுத்து றங்கும் மூலேக்குச் சென்ருன்; அவன்காலில், செவ்வாழைத் தண்டுபோல், நன்றே மிதிபட்டு நங்கை ஒருத்தி, அலறிப் புடைத்தெழுந்தே 'ஆ'வென்று கத்த, நிலைதளர்ந்து நின்ருன் நெடுங்குருடன்! மங்கையோ, 10 என்போலுங் கண்ணே இழந்தாயோ பெண்ணுெருத்தி, கல்போலும் உள்ளதைக் காணுயோ என்றுரைத்தாள்!

44