பக்கம்:பாவியக் கொத்து.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

45

தன்போலும் அன்ள்ை தனிக்குருடி என்றறிந்தே, அன்பெழுத்து பொங்க அவளிடத்தில், 'அம்மே, கேள்! நானும் ஒருகுருடன்; நாள்தோறும் வந்துவந்து தானுநங்கும் மூலையில் நீ தயங்கியதை நானறியேன்; எப்படியோ வந்தாய் இராப்பொழுது தூங்கியிரு' இப்படியோர் மூலை எனக்’கென்ருன்: இப்பேச்சு வெள்ளிச் சுடர்வீசும் வீங்குநீர் வையத்தின் கொள்ளைக் கவின்காட்சி யொன்றையுமே காணுத, 20 கன்னிக் குருடிதன் கள்ளமில்லா உள்ளத்தில் மின்னி ஒளிகாட்டி, மேனியெலாம் பாய்ந்ததுபோல், நெஞ்சில் விளையாட நேர்ந்துகாண்: அன்னவனும் பஞ்சதனில் தீப்பிழம்பு பட்டதுபோல் மெய்யெல்லாம், என்றுமிலா தோருனர்வால் இன்ப நிலையாய பின்னகர்ந்து சென்ருன்:பின் பேதைக்கு ருடியொடும் ஒர்பேச்சுப் பேசுவதற் கோயாமல் எண்ணுவதும் நேர்பேச்சுத் தாராமல் நின்றுவிடில் செய்வதென்ன? என்றுபல எண்ணுவதும் ஏங்குவது மாயிருந்தான்!

நின்று மிதித்தவனே நீள நினைத்தபடி, 30 உள்ளம் விழித்திருக்க ஒண்டொடி,ஒவ் வோர்நொடியும் தள்ளி, முழுஇரவும், தானயரா தங்கிருந்தாள்!

அன்னவனைக் காண அவளும் விரும்பவில்லை! பெண்ணவளைக் காணுதற்கும் பேதையவன்

எண்ணவில்ல்l கண்ணின் ஒளிகுன்றி, காணவிய லாதவரேன். எண்ண விழைகின்ருர்? என்ருலும் ஐம்புலனில் ஒன்று குறைந்தாலும் ஓயாத நாற்புலனும் தன்றன் துறைக்குத் தடைசெய்து நிற்கவில்லை!