பக்கம்:பாவியக் கொத்து.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருடர்காதல்

அன்பு கலந்துவரும் அன்னவனின் பேச்சினுக்கே என்புருகி நின்ருள் இருசெவிகள் தாம் நீட்டி: 4 (; .

பாரில் ஒருபொருளும் பாரா திருக்கின்ருள்! யாராரோ சொல்லுவதும், யாராரோ பேசுவதும், வீடென்று கூறுவதும், காடென்று சொல்லுவதும், மாடென்றும், ஆடென்றும், மக்களென்றும் கூறுவதும், கேட்டறிந்தாள் ஆலுைம் கேட்கும் மொழிகளுக்கே ஏற்ற பொருள்களிவை என்னுந் திறனறியாள்! மண்ணின் நிறமென்ன? மக்கள் உருவென்ன? விண்ணென்ரு லென்ன? விடிவென்ன? என்றுணராள்t

ஞாயிறீ தென்று நவிலுவதும், ஞாயிற்றின் ஏய வொளி யாலிவ் வுல்கு புலப்படலும், கேட்டும் விளங்காமல் கன்னி இருந்துவிட்டாள்! ஊட்டி வளர்த்துவிட்ட அன்னை உருவினையும், காணுதற் கேலாக் கருக்குருடி அன்னவளைப் பேணி வளர்த்துப் பெயரிட்ட பெற்றேரும், பேரிருளைத் தங்களது பிள்ளைத் துணையாக்கி, நீர்சூழிவ் வைய நினைவை மறந்துவிட்டார்!

கண்ணே வளர்க்காத காலமெனுங் கோலனுமப் பெண்ணே வளர்த்தவியாப் பேருணர்வுக் குட்படுத்தி வண்ணம் உணராத வாலைக் குமரியினுக் # கெண்ணம் விளைவித்தான்; ஏக்கம் விளைவித்தான் 6) காணுத கையெதையோ காணத் துடித்ததுகாண்! பேணுத நெஞ்சதையோ பேண்த் துடித்ததுகாண்!

உள்ளும் புறமும் உணர்வு வளர்ந்தவனின் உள்ள விழிகளுக்குத் தன்போல் ஒருகுருடன்,

48