பக்கம்:பாவியக் கொத்து.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருடர்காதல்

மக்கள் உரைத்தறிவேன். மாண்பே இந்

நாள்வரைக்கும் ஒக்கத் தனியிருளே உள்ளத் திருந்ததுகாண்: இன்றே ஒளிதோன்றி உள்ளதுகாண் இன்பமே! ஒன்றேதாம் நாமிருவர்: உள்ளங்கள் நம்வீடு'

வன்மைசேர் கையாலுன் தோளை வருடுகின்றேன்; மென்மை உணர்கின்றேன்; மேனிநிறம் யானறியேன்! உன்றன் குளிர்குழலை நீவி உணர்கின்றேன்! என்றும் அதன்நிறத்தை யான்காணப் போவதில்லை! தென்றல் தவழ்ந்தென்னைத் தீண்டுங்கால் என்னுடலம், ஒன்றும் உவகைப் பெருங்கடலில் யான் ஒன்றி 130 நிற்கின்றேன்; அன்பே; நிலைகுலையா மானுருவே! கற்கின்றேன் அன்பை கருத்தே,இந் நாள்வரைக்கும் வாடிக் குலைந்திருந்த வெற்றுளத்தை இன்றே நீ ஓடிவந்து கொண்ட உயர்வை உரைப்பதற்குக் கண்ணிருந்த நற்புலவர் அல்லால், கருப்பையுளே கண்ணிழந்தான் கூறிவிடல் கண்ணே எளிதாமோ?”

என்று பலவா றியம்பிப் புலம்பியவன் குன்றுதோள் நீவிக் குழைந்திருந்த பூங்கொடியாள், பின்னே வருமாறு பேசுகின்ருள்; பூவுலகில் அன்னை முகமறியேன்; ஆரத் தழுவியென 翼4秒 முத்தமிட்ட தந்தை முகமறியேன்! முத்தே! நான் கத்திக் கிடக்கையிலே கைச்சோற்றை வீசிவிட்டே ஓடிவந்து தூக்கிப்பின் உச்சிமுதற் கால்வரைக்கும் கோடிமுத்தம் எண்ணுமற் கொஞ்சிக் கொடுத்தவளேக், கண்டே உளங்குளிரக் கண்ணில்லை என்செய்வேன்? பெண்ணுக நான்பிறந்தேன்! பெற்ருேரைத்

தாமிழந்தேன்!

50