பக்கம்:பாவியக் கொத்து.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 *

பாவியக்கொத்து

கண்ணுேடும், கல்விக் கருத்தோடும் வாழ்ந்து வரும், பெண்களிலே சில்லோரும் பெற்ருே ரிழந்ததனால், மாண்பிழந்து போனதாய் மக்களுள்ளே பேசுகின்ருர்! ஏன்பிறந்தேன் பெண்ணுக? ஏன்பிறந்தேன்

வல்குருடாய்! 150 பார்த்து நடந்திடவும் பார்வையில்லே! என்னுடலைக் காத்துக் கிடந்திடவும் கண்ணில்லை; என்செய்வேன்?

நீளத் தனியிருளில் நிற்கின்றேன்! உங்களது கோலத் திருமேனி காணு திருக்கின்றேன்! பெண்ணென்றும், ஆணென்றும் பேசுகின்ற

மாந்தரெலாம் என்னுருவாய் நிற்கின்ருர் என்னுந் திறனறியேன்? மச்சென்றும், குச்சென்றும், மண்ணுலும், கல்லாலும், உச்சியறி யாத உயரத்தில் வீடுகட்டி, வாழ்கின்ருர் என்றுபலர் வாயாகக் கேட்டுள்ளேன்: பாழ் குடிலோ, நீளப் படிவைத்த மெத்தைகளோ 166 ஒன்றுமே வேண்டா: ஒருகை நிலம்போதும். என்றென்றும் நானுங்கள் பக்கத் திருந்தபடி, பேசி மகிழ்கின்றேன்; பேசுகின்ற நல்லுருவே! மாசில்லா நன்மொழியே! மண்ணுலகில் இத்தனைநாள் காணுத பேரோளியைக் காண்கின்றேன் உங்கள்பால்:

பூணுத பேருவகை பூண்டேனே! என்னுளத்தில் ஏறிநின்ற நற்றுணேயே! ஏழைக் குருடியிடம் ஊறிநின்ற இன்பமே உள்ளுயிரே! உங்களையே, தொட்டு மகிழ்கின்றேன்! தொல்லுலகில் யானறியா எத்துகணயோ இன்பத்தை இன்றுணர்ந்தேன்:

- என்சிறுகை 176