பக்கம்:பாவியக் கொத்து.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

பாவியக்கொத்து

3

முத்தத்தால் செல்லி முகஞ்சிவந்து போனதையும், மத்தத்தால் ஒவியமாய் மங்கையவள் நின்றதையும், முத்தன் அறியவில்லை; ஆனாலும் முன்னறியா, எத்துணையோ நல்லுணர்வை இன்றடைந்தா ரவ்விருவர்!

அன்னவரின் காதலுக்கே ஆருந் தடையில்லை! மன்னவரின் பேருரிமை மண்ணுகிப் போனதுகாண்! சாதித் தடையில்லை! செல்வச் செருக்கில்லே! மோதுகின்ற அச்சமில்லை; மூடர்க் கிடமில்லை "மானென்றும் பெண்ணை, மணவாளன் தன்னையோர் "கூனென்றும் கூறி, குறைகாட்டும் பேச்சில்லை! 190 கொட்டிவைத்த பண்டத்தைக் கொண்டானின்

தாய்பார்த்தோர் தட்டுக் குறைந்ததென்ப் பெண்ணனங்கைத்தள்ளிவிடும், கல் நெஞ்சம் இல்லை; கழுகுநோக் கங்கில்லை! பல் கொஞ்சம் துரக்கென்றும், பார்வைகொஞ்சம்

மட்டென்றும் மண்ணில் உயிர்கட்குள் மாசுமிகப் பேசுகின்ற மொண்ணைப் பழக்கமில்லை! மூட வழக்கமில்லை! கண்ணழகு நீங்கக் கருத்தழகே வாய்ந்திருந்த பெண்ணணங்கை அன்னவனும்,பேதையினை அன்னவளும் ஏற்று மகிழ்ந்தபின்ன என்னகுறை அன்னவர்க்கே? தூற்றும் உலகவரிக்குத் தோதில்லை; ஆதலினல் 2ፁ ፀ அன்பும் அறனும் உடைத்தாய இல்வாழ்க்கைப் பண்பும் பயனுமென் ருகிப் படர்ந்ததுகாண்!

உள்ளத் தொளிபடர்ந் தோங்குதல்போல் முத்தனவன், துள்ளி யெழுந்தான்; அத்தோகையவன் பின்னெழுந்தாள்'