பக்கம்:பாவியக் கொத்து.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி, காவியம் என்பன வடசொற்கள். கவிதை, கவிஞன், காவியம் என்னும் சொற்களோ வட சொல்லும் தமிழிறும் இணே ந் த கலவைச் சொற்கள் (Hybrid) ஆகும். தமிழடிமையும் ஆரிய வழக்குப்பெருமையும் மிகுந்த காலத்தில் இச் சொற்கள் பெரிதும் ஆளப்பட்டனவேனும் தமிழ் மலர்ச்சியுற்றுவரும் இக்காலத்தே இத் தகைய சொற்களைக் கையாளுதல், மேலும் நம் மையும் நம் மொழியையும் வல்லடிமைச் சேற் றில் புதைத்துக் கொள்வதாகும். கவி எனும் வட சொல்லுக்கிணயாக வழங்கும் கவிதை, கவிஞன் என்னும் இருமொழிக் கலவைச்சொற் களுக்கும் தூய தமிழ்ச்சொற்கள் பா, பாட்டு அல் 5 பாடல். பாவலன் என்பனவே. கவி தழுவி டெழுந்த தொடர் நிகழ்ச்சி காவியம். பா தழுவி எழுந்த தொடர் நிகழ்ச்சி அல்லது கதை யம். பாவியம், குறும்பாவியம், நெடும் الا பாவி ம் என்றும் பிரிக்கப்பெறும். பாவியக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவியக்_கொத்து.pdf/7&oldid=1273713" இலிருந்து மீள்விக்கப்பட்டது