பக்கம்:பாவியக் கொத்து.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைகள் மாநாடு

- முன்னுரை.

(ஒருவர் கருத்து இன்ைெருவரை ஆளலாம்; ஆல்ை ஒருவர்மொழி இன்னொரு மொழியை ஆளக்கூடாது. மொழி ஆளப்படுமானுல் கருத்து குருடாகப் போகின்றது. கருத்து குருடால்ை பிறப்பே பொருளற்றதாகப் போகின்றது; வடிவு சிதைகின்றது: உயிர்மை அழிகின்றது.

மொழி மாந்தரை மட்டும் பிணிப்பதன்று; விலங்கு, பறவை, பிற சிற்றுயிர்கள் யாவற்றை யும் பிணிக்கும் ஓர் இயற்கையாக்கம்!

சிற்றுயிர்களும் தம் இயற்கை உயிர்ப்பை விலக்கி வேருேர் உயிரின் உயிர்ப்பில் வாழ ஒருப்படுவ தில்லை. தன்தன் தனிமைச் சிறப்பையே ஒவ்வோ ருயிரும் வெளிப்படுத்த விரும்புகின்றது.

உயிரறத்தை வெறுமையாக்கும் .ெ மா ழி யடிமையை எதிர்த்துப் போராட ஒரு சிட்டுக் குருவிக்கும் வல்லமை உண்டு. இயற்கைச் சட்டம் மாற்றப்படும் பொழுது அக் குருவியே யானையின் வன்மைகொண்டு போரிடுகின்றது. அரசியல் வலிமை, பொருள்வலிமை, இவற்றல் வரும் அதிகார வல்லாண்மைகள் யாவும் அக்கால் சிதறியடிக்கப் படுகின்றன)