பக்கம்:பாவியக் கொத்து.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

பாவியக்கொத்து

இந்தியப் புட்கள் இணைந்தொருங்கே வீற்றிருந்தl கண்ணேப் பறித்திழுக்கும் காந்தப் பறவைகளாம் வண்ண மயிலும் வளர்கிளியும் பூங்குயிலும் 冠酶 மின்னற் குருவியும் மேவும் புறவினமும் நன்னர் மொழிபயிலும் நாகணவாய்ப் புள்ளினமும் வாழ்வை இசைக்களித்து வாழ்வானம் பாடியும் சூழ்வுநிறை காகமும் சூர்த்தகுரல் ஆந்தையும் வாவல் இனமும் வளைகழுத்துக் கொக்கினமும் சேவலொடு கோழிகளும் சேர்ந்தங் கிணைந்திருந்த! ஆங்கவற்றின் மேலே அரசக் கழுகொன்று வீங்குகின்ற மூச்சோடும் வெற்றி நினைவோடும் சூழ்பறவைக் கூட்டத்தைச் சுட்டெரிக்கும்

பார்வையொடும் ‘வாழ்க பறவையினம்" என்றவொரு வாழ்த்தெழுப்பிப் பின்னர் வருமாறு பேச்சைத் தொடங்கியதே

‘என்னருமை மக்களே! இன்ருேர் திருநாளாம்! இன்ருேடு நாம் அமைத்த ஏற்றமிகு நல்லாட்சிக் கொன்பது மாதங்கள் ஒடி மறைந்தனவாம்! இங்கென்றன் ஆட்சியிலே இங்கொன்றும் அங்கொன்றும் பொங்கும் பசிப்பிணி,நோய் பூண்டுயிர்கள் மாண்டாலும் பொல்லா விலங்குகளால் புன்மையிடர்ப் பட்டாலும், வல்ல கொலைகளவு வாய்த்தாலும், நீங்களெலாம் எஞ்சி யிருக்கின்ற காரணத்தால் இவ்வாட்சி. அஞ்சுமா றில்லை; அனைவர்க்கும் ஒப்புதலே § {} என்னும் ஒருகுறிப்பை யானறிந்து போற்றுகின்றேன்(இன்ன இடத்திலே எங்கிருந்தோ இல்இைல்லை. என்ருேர் பறவை இடுக்கில் தலைமறைத்துக் கொண்டு குரல்கொடுக்கக் கூட்டம் சலசலக்கும்)