பக்கம்:பாவியக் கொத்து.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைகள் மாநாடு

ஆராங்கே?" என்றே அதிர்ந்த குரலெழுப்பி, நேரங் கடத்தி, நிமிர்ந்தவொரு பார்வைதந்து வல்ல கழுகரசன் சொற்கள் வழங்கியது:

‘புல்லர் ஒருசிலர் மாருய்ப் புகன்ருலும் இந்திய நாட்டுப் பறவை இனத்துக்கு வந்த பெருமையினை வாய்வலிக்கப் பேசிடினும் 40 காது புளிக்குமோ? நெஞ்சம் கரையாதோ? ஒது பெருமை உலகப் பெருமையன்ருே: ஆதலினுல் உங்கள் அனைவர்க்கும் ஒன்றுசொல்வேன்; தீதாய் நினைவற்க: உள்ளந் திறந்துரைப்பேன்; திங்களொன்முய் ஆய்ந்துவந்து தீர முடிவெடுத்தே உங்களது நன்மையாம் ஒன்றே கருதி இதனை உரைக்கின்றேன்; இங்குவந்த நீங்கள் அதனை உவந்தேற்க அட்டிசொல மாட்டீர்கள் என்பதையும் யானறிவேன்; என்ருலும் இங்குசிலர் தம்பழமை பேசி இசைவு தரமறுப்பர்: 5 0. இன்னவரைப் பற்றியான் என்றும் வருந்துகிலேன்; அன்னவரோ பண்டைப் பெருமை அழப்பேசிப் பொங்கிவரும் நல்ல புதுக்கருத்தை யொப்புகிலார்; இங்கிவரின் நாக்கை இழுத்தறுக்க நானறிவேன்; முன்ளுேர் முயன்று முடியாமற் போனதிதாம்; என்னேர் திறத்தால் இதுமுடியும் என்றுணர்ந்தேன்;

"என்னருமை மக்களே! இன்றுநாம் வேண்டுவன: முன்னர் நறுங்கல்வி மூக்குநிறை நல்லுணர்வு! பின்னர் குடியிருப்பு பீடுற்ற நல்வாழ்க்கைஅல்லவா?" என்றரசப் புள்ளங் கதட்டிடவே, 6 (; எல்லாமும் ஆம்ஆம் எனவே தலையசைத்த:

58