பக்கம்:பாவியக் கொத்து.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

பாவியக்கொத்து

இவ் விடையால் உள்ளம் இனித்த கழுகரசன், ஒவ்வாதார். இங்கே உளராவென் றேவினவே, காக்கை யினம்"இல்லை; இல்லை எனக்கரையும், சீழ்க்கை யடித்துவந்து வெளவால் வரவேற்கும். பின்னும் கழுகரசன் பேசத் தொடங்கியதே!

இன்னும் உரைப்பேன்; இதுகேளிர்! நாமெல்லாம் ஒற்றுமையாய் வாழ்ந்தால்தான் முன்னர்

柬。。,慢,y* 。。,哆,,,,。,曾 曾,盗 உரைத்தவற்றை முற்றும் சிறப்பாய் முடித்தல் எளிதாகும்! இன்றேல் நம் எண்ணம் எரியுள் இடுபஞ்சாம்! 70

அன்னவோர் ஒற்றுமை எங்ங்ன் அடைகுவதோ? என்று வினவின் இதோநான் உரைக்கின்றேன்: ஒன்றும் பிறழாமல் உள்ளத்தில் கொள்ளுங்கள். நம்முள் பல இனங்கள், நம்முள் பலமொழிகள்: நம்முள் பலவாழ்க்கை; நம்முள் பலவழக்கம்;

ஊரும், மொழியும், ஒழுக்கமெலாம் ஒன்றுவதே சீரும் சிறப்புமாம்! இல்லையெனின் சீரழிவே!

ஈகை உளத்தோடே எண்ணி முடிவுசெய்தேன்; ஆகையினல் நீங்கள் அனைவிரும் எம்மின் கழுகு மொழிதன்னைக் கற்றுவரல் வேண்டும்: & t) பழகின் மிகளளிது! பைங்கிளியும் பூங்குயிலும் ஆடல் மயிலும் அவரவர்தம் முன்னேரின் பீடாம் மொழியே பெரிதென் றுரைத்திடினும் ஒற்றுமைக்கு நல்லவழி உண்டால், கழுகுமொழி கற்றுவரல் ஒன்றே கனிவாக மீண்டுரைப்பேன்: