பக்கம்:பாவியக் கொத்து.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைகள் மாநாடு

காக்கை யொருவகையா கா கா கா வென்றுரைக்கக் "கக்கூக்சு வ்ென்றே குயிலிசைக்கப், பைங்கிளியோ 'அக்கா அக் காவெனவே ஆர்க்க, மயிலகவ, கொக்கரக்கோ வென்றிருந்தச் சேவல் குரலெழுப்ப. தூத்துரத்து என்ன மொழிக்குழப்பம்? தோழரீர்? 90 பூத்துக் குலுங்கும் புதுமைக் கருத்துகளைச் சற்றே நினையுங்கள்; உள்ளம் சரியாகும்! பற்றே தவிரப் பழமை உயர்வில்லை! இந்தக் கருத்தை எதிர்த்திடவிங் காருமிலர் என்றே கருதுகின்றேன்; இல்லேயா, காக்கையே?’

என்றுதன் அண்டை இருக்கின்ற காக்கையினை மென்றுகூ ழாக்கி விழுங்கும் இடிக்குரலில் கேட்டிடவும், காக்கை கிடுகிடுத்து மெய்வெயர்த்தே ஆட்டுந் தலையோடும் ஆடாக் குரலோடும் "ஆமாமாம் அப்படியே ஆரெதிர்ப்பார்’

என்றுரைத்தே 100 பூமாலை ஒன்றைப்போய்ப் போட்டு வணங்கியது: வெளவால் இனங்களெலாம் வாழ்கரசன் வாழ்க"வென ஒவ்வும் மனக்கருத்தை ஆங்கே உரைத்தமர்ந்த: ஏந்தும் மனத்துயரால் நெஞ்சில் இடியேறிக் காந்தச் சிறுகுருவி உள்ளம் கனன்றிருக்கும்: தோகை மயில்களெலாம் நெஞ்சம் துடிதுடிக்கும்! வேகும்.உள் ளத்தால் குயில்கள் வெதிர்வெதிர்க்கும்! பச்சைக் கிளிக்குப் பதைபதைப்பு வந்தாலும் அச்சம் ஒருபுறத்தே ஆட்கொள்ள நின்றிருக்கும்!

காதற் புறவினமோ, கன்னித் தமிழ்ப்புலவர் 1 10 தீதென்ன வந்தாலும், உள்ளம் திரியாமல்

60