பக்கம்:பாவியக் கொத்து.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6}

பாவியக்கொ த்இ.

பண்டை இலக்கியத்தைப் பாடுவதும் விள்ளலுமே தொண்டென்று கூறித் தொடைநடுங்கிக் கொண்டுவரும் ஆக்கம் கருதி அமர்வதுபோல் ஆங்கிருக்கும் நோக்கம் எதிர்பார்த்தே நிற்கும் கரிக்குருவி! வானம்பா டிக்குருவி வந்த தடையெண்ணி மானந் திரிந்திழிந்த மற்ற பறவைகளைப் பாட்டால் மனந்திருப்பி உள்ளத் துணர்வெழுப்பும் நாட்டத்தோ டின்னும் நடப்பதெலாம் பார்த்திருக்கும்! நா.கணவாய்ப் புள்ளினமோ நாவும் அசைக்காது 120 வாகான நல்முடிவு வாராதோ என்றிருக்கும்! ஆந்தை,"அக் கூ'வென் றவலக் குரல்கொடுத்தே ஏந்துகின்ற துன்பம் எடுத்துப் பறைசாற்றும்! கொக்குக் குலமெல்லாம் கூம்பி இருந்தபடி தக்கதொரு நேரம் தமக்குவரக் காத்திருக்கும்!

இன்னபடி ஆங்கே இருந்த பறவைகளின் முன்னர் கழுகரசன் மொய்ம்புறவே உள்ளுவந்தும், ஆட்சி தலைக்கொண்ட ஆண்மைச் செருக்காலே மீட்சியிலாப் புட்களெலாம் மீளத் துடிதுடிக்கும் காட்சி கருதாமல் கால்மேலோர் கால்போட்டு :: மாட்சி குறையாதும் மன்னன்போல் வீற்றிருக்கும்!

எண்ணம் முதிர்ந்துவர எல்லாப் பறவைகளும் விண்ணென்று வானில் வெளிப்பட்டுப்போவதுவும், மீட்டும் மரக்கிளைமேல் வந்தமர்ந்து மீளுவதும் கூட்டமாய்க் கூடிக் குசுமுகவென் ருய்வதுமாய் ஆங்கிருக்கக் கண்ட கழுகரசன் மீண்டுரைக்கும்