பக்கம்:பாவியக் கொத்து.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைகள் மாநாடு

"சங்கென்றன் கூற்றிற் கெதிர்க்கூற் றிருக்குமெனில் உள்ளத் துணிவோ டெழுந்தே உரைத்திடுக; தள்ளத் தகாத கருத்தென்னின் மேற்கொள்வோம்', 140 என்றே குடிநலத்தை எண்ணி உரைப்பதுபோல் நன்றே புளுகிற்று நாட்டமெலாம் ஒன்றே! இருந்திருந்து பார்த்தே எழுந்ததொரு சிட்டே! அருந்தின் ஒருவாய்க்கும் ஆகாக் குருவியினைக் கண்ணுருட்டிப் பார்த்துக் கழுகரசன் என்னவென, வண்ணச் சிறுசிட்டு வாய்பதைக்கக் கூறியது:

'வண்மைக் கழுகரசே! வாழுகின்ற புட்களெல்லாம் முன்னம் பயிலும் மொழியைத் துறந்தினிமேல் உங்கள் கழுகுமொழி ஒன்றே மொழிவதெனின் 150 எங்கள் மொழியால் எழுகின்ற பல்லிசைகள் மாய்ந்தொழிந்து போகாவோ? மாய்ந்துவிடின்

- அந்நிலைமை வேய்ங்குழலும் யாழும் விறல்முழவும் நல்லுறுமும் கொம்பும் முரசும் குடப்பறையும் துந்துபியும் பம்பையும் சங்கும் பதறும் கரடிகையும் சேர்ந்தியம்பும் பல்லியங்கள் யாவுமே ஒன்றேபோல் ஆர்ந்தே ஒலிப்பனவென் ருகாவோ? பல்லிசையேன்?

மல்லிகையும் தாமரையும் உள்ளம் மகிழ்மலரும் முல்லை மருக்கொழுந்தும் முள்ளலரி நன்மலரும் ஒன்றுபோல் நாற்றம், உருவம் பெறுவதெனின் I 64) நன்ருமோ? அந்தநிலை நாளில் புளிக்காதோ?

ஒன்றில் மனங்கசந்தால் ஒன்றில் உளமினிக்கும்! ஒன்றில் துயர்மிகுந்தால் ஒன்றில் மகிழ்வலரும்:

62