பக்கம்:பாவியக் கொத்து.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொத்து என்பது பாவியங்கள் சில சேர்ந்த தொகுப்பு என்று பொருள்படும்.

இப் பாவியக் கொத்தில் நான் முன்னரெழுதிய பத்துச் சிறு பாவியங்கள் அடங்கியுள்ளன. பிற சிறு பாவியங்கள் பின்னர் வேறு பெயரில் நூலாக வெளிவரும். இதில் வரும் பா வி யங்கள் பலவகைப் பாவினங்களிலும் எழுதப்

பெற்றுள்ளன.

இக் கொத்துள் அடங்கும் சிறு பாவியங்கள் பாவும் ஒரேடெ ழுதில் இயற்றப்பெற்றன அல்ல. அன்றியும், அவை யாவும் மனவியலேத் தழுவி யெழுந்த பல்வேறு வாழ்க்கை யமைப்புகளைப் பற்றியனவாகும்.

வெறும் பொழுதுபோக்கிற்காக எழும் ஆக்கங் களைப் போலன்றி, மாந்தரின் உள் மனத்தே ஆங்காங்கு எழுந்து குமிழியிடும் பல தீய எண்ணங்களே ஒடுக்கவும் நல்லெண்ணங்களை ஊக்கவும் எழுதப்பட்டனவாகும் இப் பாவி யங்கள். இவற்றுள் குருடர் காதல், பெண் ணல்லள் இரண்டும் வானம்பாடி" என்னும் பாட்டிதழில் வந்தவை. பிற யாவும் தென் மொழியில் வெளியிடப் பெற்றவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாவியக்_கொத்து.pdf/8&oldid=1273714" இலிருந்து மீள்விக்கப்பட்டது