பக்கம்:பாவியக் கொத்து.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

புட்களினம் கூறிப் பொலபொலெனத்

தம்சிறகால், 190 வெட்கிக் கழுகு வெலவெலத்துப் போகுமட்டும் ஆர்த்த ஒலியெழுப்பி ஆங்கெழுந்தே ஒன்றையொன்று சேர்த்தணைத்தே உள்ளம் சிலிர்த்திடவே வான்நோக்கிக் சிவ்'வென்று தாவிச் சிறகடித்துப் போயினவே!

வெளவாலும் காக்கைகளும் மட்டும் வருந்துவபோல் தொங்குந் தலையோடு துன்பமுகம் காட்டினவா றங்கே இருந்த அரசக் கழுகுக்கே ஆறுதலே கூறி, அவையும் பிரிந்து சென்ற!

மாறுதலை, புட்கள் மலர்ச்சியினை எண்ணியெண்ணி உள்ளமிகச் சோர்ந்தே உணர்வழிந்து போயடங்கக் 200 கள்ளக் கழுகரசன் கண்ணிர் வடித்ததுகாண்! மங்கிவரும் ஆட்சி மறைய இருப்பதையும், பொங்கிவரும் மக்கட் புரட்சிப் புயலினையும், வெய்ய புரட்சியினல் வினை மாற்றமும் பொய்ம்மைக் கருத்தும் பொடிப்பொடியாய்ப்

போவதையும் எண்ணிப் பறவைகள் முன் ஏதேனும் வம்புரைகள் பண்ணி யிருந்தால் படும்துயரம் உள்நினைந்தும் தாக்கப் படாமலுயிர் தப்பியதைக் கண்டுவந்தும் ஏக்கமொடு சென்ற தெழுந்து:

(() l

64.