பக்கம்:பாவியக் கொத்து.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில(ா)ங்கு

முன்னுரை.

(மாந்தரில் விலங்கும் உ ண் டு; விலாங்கும் உண்டு. மெலியோரைத் தம் வலிமையால் சிதைப் போர் மாந்தராயினும் விலங்குகளே யாவர். நல்லவர்போல் வாழ்ந்து வாய்ப்புக் கிடைக்கும் பொழுது தீயராய் வாழ்வோரும் உளர். இவர் விலாங்குமீன் போன்றவர்.

குமுகாய அமைப்பில் உள்ள இத்தகைய விலங்கு களாலும் விலாங்குகளாலும் எத்தனையோ ஏழை எளியவர் வாட்டி வதைக்கப்படுகின்றதை நாம் கண்கூடாகக் கண்டு எதிர்த்துப் போரா டும் வன்மையின்மையால் மென்று விழுங்கிக்கொண் டிருக்கின்ருேம்.

இத்தகைய தீயவர்களால்-கயவர்களால் நாமோ அல்லது கம்மைச் சார்ந்தவர்களோ சிதைக்கப் படும் பொழுதுதான், நாம் அவர்தம் கொடு மையை உணர்கின்ருேம். சிலநேரங்களில் அவர் களை எதிர்த்துப் போராடவும் செய்கின்ருேம். அவர்களின் தீமைக்கு அறத்தீர்ப்பையும் நாடு கின்ருேம். ஆனால் அவ்வறமும் தீர்ப்புமே அவர் தளாகி விடும்பொழுது கம் நெஞ்சம் சுக்கு நூருகவெடித்து விடுகின்றது. இக்கொடுமையை மாற்ற வழி........?)