பக்கம்:பாவியக் கொத்து.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

பாவியக்கொத்து

ஒத்துப் போகும் உயர்ந்த பண்பொடும் தொத்திக் கொள்ளும் தூய்மை அன்பொடும் ஒன்றிப் பழகி உயர்ந்ததோர் இல்லறம்

நன்றே நடத்தி வருகையில், அவளே அண்மையில் உள்ள சிற்றுார் அமைந்த பெண்கள் பள்ளிக்கு மாற்றிப் பிரித்தனர்! ஆளன் அரசினர் அலுவல் பார்ப்பதால் வாள்விழி யாளொடு வராமற் போகவே, வெட்டப் பட்ட உயிரொடும், கடமையால் கட்டுப் பட்ட உடலொடும், நெஞ்சொடும் விட்டுப் பிரிகிலாச் சிட்டுக் குருவிகள் மட்டிலாத் துயரொடும் வாழ்க்கை நடத்தினl

ஆயிரம் மடல்கள் இடையில் பறந்தன: சேயிழை நினைவும் சேயோன் நினைவும் மடலொடு சென்று மடலொடு மீண்டன! உடலொடு கிடவா உயிர்கள் துவண்டன:

கிழமைக் கொருமுறை கிளிமொழி வருவாள்! அழகியை அனுப்பிய அடுத்த நாளே, 30 ஆளனும் வண்டியில் அவள்வயின் சேர்வான்! நாளும் கிழமையும் மாதமும் நகர்ந்தன. இடையிடைக் கல்வித் துறையினுக் கெழுதிய மடல்களோ திரும்பி மறுப்பொடு மீண்டன! அன்பு நெஞ்சினர் அவலம் உணரா

வன்பு மனத்தினர் .அவர்களைக் கூட்டிலt!

இப்படி இருக்கையில் ஒருநாள் இவளுக்கு முப்படி யாய்அவன் நிகனவு மூளவே, வெள்ளியும் காரியும் விடுமுறை பெற்றுப் பள்ளி முடித்துப் பறந்து சென்றே 40