பக்கம்:பாவியக் கொத்து.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில(ாங்கு

இறுதியாய்ப் போகும் வண்டியில் ஏறி உறுதியாய் வீடுபோய் உயிர்க்கும் நினைவொடே. உந்து வண்டிக்குக் காத்தாள் ஒண்டொடி! அந்த வண்டியோ அன்றைக்குப் பழுது மொய்த்த நினைவினல் மொய்குழல் குலைந்து வைத்த காலடி வருத்திடத் திரும்பி இரவு பத்துக்கு இருப்பிடம் வந்தாள்!

திறவுகோல் எடுத்தே அறையினைத் திறந்தாள்! பொய்யாய்ப் போன வாழ்க்கையால் புலம்பித் தொய்ந்த உடலொடு தொப்பெனப் படுக்கையில் 8: சாய்ந்தாள் அன்பின் சாகா நெஞ்சினள்.

ஏய்ந்த அரைமணி ஏகிய பின்றை பள்ளிக் காவலன் பதறிட வந்தே 'அம்மா, அம்மா, என்றே அரற்றி இம்மா நேரமா இங்குதான் இருந்தார்; உங்களைப் பார்க்க வேண்டுமென் றுரைத்தார்: உங்களைக் காணுது போகவே அவரைப் பள்ளியில் இருத்தி, வண்டியைப் பார்த்தேன்: இல்லையென் றறிந்தே இங்கே வந்தேன்! உடனே வருக' என்றவன் உரைக்க, இ ) உடனே எழுந்தவள் ஒருகால் அவரே என்னைப் பார்த்திட இங்குவந் தாரோ? என்னினும் அவர் திறம் இருபடி உயர்ந்ததோ: இறைவா, அவராக இருந்திடல் வேண்டும்! நிறைவே தோ, எண்ணம் நிலைத்திடின்'. ான்றே நினைத்துக் காவலன் ஏக ஒன்றே யன்றிப் பிறநின்ை வில்லான் பள்ளி யடைந்தாள்!

68