பக்கம்:பாவியக் கொத்து.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

மண்விழிப் புற்றதாய்க் காலை மலர்ந்தது 80 கண்விழிக் கையிலே கட்டிலிற் கிடந்தாள்! புண்போல் மெல்லுடற் பொருத்தெலாம் பெருவவி! விண்போலும் நெஞ்ச விரிவெலாம் சாவொலி

முன்னிரா நடந்த நிகழ்ச்சிகள் முன்பின்னப்ப் பொன்னம் மாளின் நினைவினில் படரவே 'ஓ'வென் நழுதாள்: 'ஆ'வென் றலறிஞள்! சாவாமல் செத்த துயரை நினைத்தாள்'. நினைத்ததும் நெஞ்சம் நெருப்பாய்ச் சுட்டது தனத்தான் அறைந்தாள் தலைதரை மோதினுள்! எழுந்தாள் புலம்பினல் இளமுகம் கீறினுள் 9薛 விழுந்தாள் புரண்டாள்! வெதும்பினள் உருண்டாள்! சாவொன்று வந்து சாராதோ என்ருள்! 'து'வென்று மக்கள் கூட்டத்தைத் துப்பினுள்: பெண்ணைப் பிழைசெயும் உலகைப் பழித்தழுதாள்! கண்ணில் கனப்பேற்றிக் குருதிநீர் பிழிந்தாள்! அறநூல் சாடினள் அகநூல் நகைத்தழுதாள் புறநூல் தனக்குப் புத்துரை எழுதினள்! ஆளன எண்ணி வாயரற்றி அங்காந்தாள்! வாள்போல் தமைப்பிரித்த அலுவலைத் துாற்றிள்ை ஆசிரியை என்றே அரசினர் தந்த 100 மாசுநிகர் பட்டச் சான்றிதழைத் தூள் செய்தாள் கண்முன் கிடந்த பொருள்கள் சிதறடித்தாள்! பண்மறந்து போன பச்சைக் கிளியாய், சொல்மாறிச் சொல்லி உள்ளம் சுண்டினள்! அல்வழிக் கவளை ஆளாக்கி யோக்னக் கொல்வழி என்னென்னக் குறிக்கொண் டரற்றிள்ை!

70