பக்கம்:பாவியக் கொத்து.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.

பெண்ணல்லள் (1959)

74

'பத்துநாள் முன்பிறந்த பச்சைப் பசுங்குழந்தை, கத்திக் குரல்வற்றிக் கண்ணயர்ந்து தூங்குமட்டும் எங்குநீ போயிருந்தாய்' என்றிரைந்தாள் மாமிய வள்:

"பொங்கிவரும் சோற்றைப் புனலிட்டே ஆற்றிவிட்டுத் துள்ளிக் குதித்தோடும் கன்றின் துடுக்கடக்கிக் கிள்ளிவைத்த கீரைக் கொழுங்கட்டைத் தின்னவந்த வெள்ளாட்டுக் குட்டியைநான் வேலிவரை ஒட்டிவிட்டுப் பள்ளத்தில் கால்வைத்துப் பாதஞ் சுளுக்கேற், முன்வீட்டுப் பாட்டி மருத்துவத்தைக் கேட்டுணர்ந்து மின்வெட்டும் நேரத்தில் மீண்டிருக்க, நீயென்னை 10 ஏன்விரட்டு கின்ருய் இளங்குழந்தை கத்துமட்டும் கூன்கூரை தாங்கி, என்றும் கூளுத தாண்போலப்,