பக்கம்:பாவியக் கொத்து.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

நேற்றுவந்த பெண்ணுள் நடத்துகின்ற வேலைகளால், ஆற்ருத கண்கொண்ட அன்னம் மனங்கசந்தாள்!

சீவி மினுக்குகின்ருள்; சேலைபல மாற்றுகின்ருள்: ஏவுகின்ற வேலைக் கெதிர்நின்று பேசுகின்ருள்: தாய்வாங்கித் தந்திருந்த தண்ணீர்க் குடமெடுத்துப் போய்மீளும் போதினிலே பொட்டென்று

- வைக்கின்ருள் 60 'கொட்டுக்கொட் டென்ருெலிக்கக் காலால்

நடக்கின்ருள்; விட்டுக் கொடுக்காமல் வாய்நீளப் பேசுகின்ருள்: கூன் கிழவி மாமியிடம் கூனிப் பணிந்திட்டே நானழைத்தால் வேலையென நாளும் உரைகின்ருள்: உள்ளறையில் நீங்கள் ஒருநாள் உறங்குகையில் மெள்ள நுழைந்துங்கள் மேனிநலங் சண்டா'ளென்(று) அன்னம் பலவகையாய் அன்ருெருநாள் நள்ளிரவில் தன்கணவ னண்டை தயங்காமற் கூறியிந்த வேலைக்கா ரச்சிறுக்கி வேண்டா: விடிந்தவுடன், கூலி கொடுத்தனுப்பி மற்ருெருத்தி கூப்பிடுங்கள்” 70 என்று வழக்காட் ஏற்றவனும் தானெழுந்தே அன்று விடியலிற்போய் ஆறுமணி யாய்த்தேடிக் கொஞ்சம் முதிர்ந்தவொரு பெண்ணுளைக் .

கூட்டிவந்தான்; அஞ்சி இருந்த தஞல் அன்னம் மகிழ்வடைந்தாள்.

வேலைக்கு நல்லதொரு பெண்ணுக வந்தவுடன், காலமுதல் மாலை கழியாப் பொழுதெல்லாம்

77