பக்கம்:பாவியக் கொத்து.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

சோற்றுக்குப் போகத் துணியோகத் திங்களிலே வட்டிக்குப் பத்தும் வரவில் இருபத்தும் விட்டெறிந்தால் போயிற்று வீழுமோர் ஆண்டிற்குள் முத்துப் பதக்கமும் மோதிரமும் மீதியன்ருே? சொத்துகள் சேர்க்கச் சிறந்த வழியிதுவே!,’ என்று விளக்கி இறுமாந்தே அத்தானின் குன்றுதோள் சாய்ந்தாள்: கணவன்

உரைக்கின்ருன் 110

'கோலப் பொடிமுதலாக் குங்குமம்,நல் மஞ்சளுக்கும், காலையிலே வாங்குகின்ற முல்லைக் கடிமலர்க்கும் ஆகுஞ் செலவென்ன? ஆவின்பால், சீனிக்கே ஏகும் பொருளென்ன?' இட்டளிக்கும் தோசைக்கும் போகும் பணமென்ன? புத்தரிசிச் சோற்றுக்கே வேகும் பொருளென்ன? வெண்ணை தயிர்வகைக்கே என்ன செலவாகும்? காய்கறிக்கே என்னுகும்? பண்ணியங்கள் பண்ண பருப்பென்ன? வெல்லமென்ன? தேய்த்துத் தலைமுழுக எண்ணெயென்ன? தேர்ந்தாயா? வாய்க்குக் களிபாக்கு வெற்றிலக்கும் என்னகும்; 129

இத்தனைக்கும் போனல் இருப்பதில் தான் நீகட்ட, அத்தைக்குக் கட்ட, அவன்கட்ட, நான்கட்ட, வெள்ளைத் துணியும் வகைவகையாய்ப் பூந்துகிலும் கொள்ளையென் றில்லாமற் போனலும் இல்லையென்று சொல்லாமல் பெற்றுச் சுவைகாண வேண்டாவா? இல்லறத்து வாழ்க்கை இவற்ருேடே விட்டதா? உண்ண உணவும் உடுக்க உடைவகையும்

79