பக்கம்:பாவியக் கொத்து.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவியக்கொத்து

தொல்லைப் பணத்தொல்லை காரணமாம்:

தொல்பெருமை வாய்ப்பட்ட நந்தமிழர் வாய்க்காத செல்வத்தால் நாய்ப்பட்ட பாடாக நாளும் படுகின்ருர்! 1863 உண்ணற் குணவும், உடுத்தற் குடைவகையும் எண்ணற் கரிதான மக்களிடம் இன்றில்லை;

போலிப் பகட்டும், பழுதைப் பழியொழுங்கும கூவி பெறுவார்க்கும் நாளும் குறைவில்லை! எத்தும் புரட்டும், இடர்செய்யும் தீயுளமும், குத்தும் களவும் கயமைக் கொடுஞ்செயலும், பாடில்லா துண்ணும் பயனில்லா வாழ்வமைப்பும் மேடில்லா நன்னிலத்து நீர்போல் பரவியது!

காணி நிலத்தில் கிணற்றுக்குக் காற்பங்கு, மானப் பெருவிடும் சுற்றி மதிற்கவரும் 190 மேலும் ஒருகாலை மேய்ந்துவிட, மீதியுள்ள நாலில் இருபங்கில் நாடகத்துக் கொட்டகைக்கே பங்கொன்று போகப் பகுதி நிலத்தினிலே, எங்கு விளைவுவரும்? எப்படித்தான் நெல்விளையும்?

உண்ணற் குதவும் உழவே முதற் ருெழிலாம்! எண்ணில் உடையே இதன்பின்னும் இவ்விரண்டும் கன்னித் தமிழகத்தின் கண்ணு யிருந்தனவே! இந்நாளில் எங்கும் இயந்திரத்தால் வாழ்கின்ருர், நெல்விளையும் நன்செய் நிலத்தை வழித்துவிட்டுச் செல்வம் விகிாக்கும் சிறுமைத் தொழில்செய்வார் 200

கல்லூரி உண்டு) அதிலே கல்வியுண்டு:கல்வியில்ை சொல்லுறிப்போவதல்லால் செந்நெல் விகளவுண்டா?