பக்கம்:பாவியக் கொத்து.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணல்லள்

கல்வியெனின் என்ன? கதைப்படிப்பும் பாட்டுமே கல்வியென் ருகுமா? கற்றவர்கள் எண்ணிடுக! வேளாண்மைக் கல்லூரி, வித்துகளின் ஆராய்ச்சி, கூல வகைக்கூடம், கற்கும் உடைப்படிப்பு மண்ணின் வகைபற்றி, வானின் மழைபற்றி, உண்ணும் பொருட்சிறப்பே, ஊட்ட வகைச்சிறப்பே என்னும் இவைபற்றி இந்நாளில் கற்றவர்கள் என்ன அறிவார்; எழுதும் திறனல்லால்'

இந்நிலையே நாட்டின் இடர்நிலைக்குக் காரணமாம்! அந்நிலையை நானறியேன், அத்தான் இதுவரைக்கும். நாட்டு நலிவாலும் நல்லறிவுக் கேடாலும், வாட்டம் அடைந்திருக்கும் இக்கால் வடவோரும், வேகின்ற வீட்டில் விழுந்ததெலாம் தாமெடுத்துப் போகின்ருர் போலப் புகுந்திங்கு மேய்கின்ருt!

முத்துநகை வேண்டா முதலில் தமிழகத்தின் சொத்தனத்தும் நாம்காக்க வேண்டுமே! மேலுக்குப் பட்ட்ாடை வேண்டா பழிவடவர் இந்நாட்டை விட்டோடச் செய்யவழி வேண்டுமே! பிள்ளைக்கு மோதிரமும் வேண்ட்ா: கடல்கடந்த நம்மவர்க்கு ஆதுணைநாம் ஆகிடவும் வேண்டுமே ஆகயிந்தத் த்ொண்டாற்று வார்க்கென்றன் அத் தாளுே

டென்தோளும் தொண்டாற்றப் போகுமென்றே" அன்னம்

முழங்குகின்ருள், அன்னம்,பெண் அல்லன் அவள்புத் தரைமாற்றுப் பொன்னேபொன் பொன்னேநற் பொன்

83