பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 கள். காதலர் கண்கள் சந்திக்கின்றன. வரதன், கிட்டு நிற்குமிடம் அஞ்சுகம் வருகிறாள்; இருப்பிடம் கூறு கிறாள்; நாளை வருவதாக வரதன் சொல்கிறான் அடுத்த நாள் வரதனும், மோகனாவும் சந்திக்கின்ற னர். காதல் மலர்கிறது. கிட்டு, அஞ்சுகத்தைக் காதலிக் கிறான் மோகனாமீது பொறாமை கொண்ட வீரி, மற்ற தாசிகளையும் சேர்த்துக்கொண்டு, அஞ்சுகத்தைச் சண்டைக்கிழுக்கிறாள்; மோசனாவை மானபங்கப்படுத் தத் தீர்மானிக்கிறாள். திருவானைக்காவில் மார்கழித் திருநாள்; தாசிகள் திருவெம்பாவை பாடுகிறார்கள்; வீரி, உங்கையிற் பிள்ளை' என்ற பாட்டை ஆரம்பிக்கிறாள்; மோகனா வும், மற்றவர்களும் அதைப் பின்பற்றுகிறார்கள். அந்தப் பாட்டில் வரும் எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க என்ற அடியை மோசனா சொல்லும் போது, அனைவரும் சிரிக்கிதார்கள். மோகனா அவமதிக் கப்படுகிறாள். அன்றிரவு மோகனா வீட்டுக்கு வரதன் வருகிறான். கதவு தாளிட்டிருக்கிறது. வரதன், ஆச்சரியத்தோடு கதவைத் தட்டுகிறான். மிகுந்த துக்கத்தோடு மோகனா சொல்கிறாள், இனி, நான் சைவரல்லாதவரைத் தீண்டு வதில்லை என்று. 'மதமா? காதலா? வரதன் திகைக்கிறான்; பித்துப் பிடித்தவன்போல் போகிறான். அவன் மனம் மாறுகிறது. "எம் மதமும் சம்மதம். சைவனாகிவிட நிச்சயிக்கிறான். இதற்கிடையில் அந்தப் பொறாமைக்காரி வீரி, மோகனாவுக்கு விபசார தோஷம் கற்பிக்க முயலுகிறாள். சிங்காரம் என்ற பேதை வாலிபனைச் சிங்காரித்து, மோகனா வீட்டுக்கு அனுப்புகிறாள்; அது வீரிக்கே அவ மானமாக முடிகிறது.