பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 முகமா நிலவா காணேனே முழங்காததென் மணிமொழி தானே மானே நகை சிந்துகிறாள் என்னை மாய்க்க மதுரித மலராம்-மதனது கணைதான் வதை புரிந்திடுதே - மனது நைந்திடுதே சமயமும் வருமோ தழுவிக் கொளவே (பூலோகர் மோகனா நடனமாடும்போது. இராகம்:- காம்போதி தாளம்:- மிஸ்ரம் என தாசைக் குகந்தவன் இவன்தான்டி-சகி தினம் வீதி வருவான்டி திரும்பி எனைப் பார்ப்பான்டி கன மையல் விளைத்தென்னைக் கண் ஜாடைசெய்வான்டி பச்சைமாமலை போல்- வர்ணமெட்டு. இராகம்:- காம்போதி தாளம்:- மிஸ்ரம் வருவதாய் உரைத்துச் சென்ற மலைமகள் குமாரன் வேலன் வருகிறான் சகி கேள் அேைனான் மலரடிச் சதங்கை ஒசை முருகவேள் நேர் நின்றாலோ மூளுமே நாணம் தோழி தரும் சுகம் தனை நினைந்தால் சன்ம சாபல்ய மாமே (வருவதாய்). இராகம்:- ஸஹானா தாளம்:- திரிபுடை கையில் பணமில்லாமல் கலவி செய்ய வந்தீரோ (கையில்) கடனானால் எழுந்திரும் ஸ்வாமி ஐயனே தென் பழநி அருமைக்குமரேசனே அம்மான் மகளானாலும் சும்மா வருவாளோ (கையில்)