பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்த் திரைப்படங்கள் - ஒரு பார்வை 1940 இவ்வருடத்தில் 36 படங்கள் தயாராகின. அபலை பக்தசேதா, பக்தி, புத்திமான் பலவான், பூலோகரம்பை, பக்தகோராகும்பர், கெட்ட நாணயம், பால்ய விவாகம், சந்திரகுப்த சாணக்கியர், தானகுர கர்ணன், தேசபக்தி, டாக்டர் பங்காரு, ஹரிஹர மாயா கிருஷ்ணன் தூது, காளமேகம், மணிமேகலை, மகாத்மா காந்தி, மீனாட்சி கல்யாணம், மீனாட்சி தேவி, நவீன விக்கிரமாதித்தன், ஊர்வசி, பரசுராமர், போலிப் பாஞ்சாலி, ராஜலோகம், சதிமகானந்தா, சதிமுரளி, சியாமசுந்தர், சகுந்தலை, ஷைலக் திருமங்கை ஆழ்வார், சூர்யபுத்திரி, திலோத்தமை, உத்தமபுத்திரன், வ:யாடி, விக்கிரம ஊர்வசி ஆகியவைகள் இவற்றில் சகுந்தலை, உத்தமபுத்திரன், காளமேகம், மணிமேகலை, ஆகிய படங்கள் வெற்றிப் படங்கள். இவ்வருடம் எஸ். டி. சுப்புலட்சுமி, டி. என். ராஜ ரெத்தினம் (நாதஸ்வர வித்வான்.) டி. எஸ். துரைராஜ், டி. ஆர். ராமச்சந்திரன் ஆகியவர்கள் அறிமுகமானார் கள். உத்தம புத்திரனில் பி. யூ சின்னப்பாவின் இரட்டை வேட நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். கன்னட நடிகை எம். வி. ராஜம்மா, ஆந்திர நடிகை பி. கண்ணாம்பா ஆகிய நடிகைகள் அறிமுகமானார்கள். O

  • 35 படங்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன.