4 டாக்கிப் பாவேந்தர் நினைவாகப் பதிக்கும் முயற்சியும் உருவாகியுள்ளது. இப்படத்தில் கலையுலக வரலாற்றுச் சிறப்புகள் உள்ளதை இப்படப் பாடல் புத்தகத்தின் வாயிலாக அறிய லாம். படத்தை இயக்கியவர், பல வெற்றித் தமிழ்ப் படங் களை உருவாக்கிய ஐரோப்பிய இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன். அகில இந்தியப் புகழ் நாதசுர வித்துவான், திருவாவடுதுறை ஆதீன வித்துவான், நாதசுர சக்கர வர்த்தி டி. என். இராஜரத்தினம் பிள்ளை அவர்கள் கவிகாளமேகமாக நடித்துள்ளார். துணை இயக்குநர் பி. எஸ். செட்டியார். இவரே பிற் காலத்தில் சினிமா உலகம்’ என்னும் முதல் சினிமா இதழைத் தொடங்கிச் சிறப்புற நடத்தியவர். சீர்காழி, கோவிந்தராசன் அவர்களின் சிறிய தந்தையார். மேலும் இப்படத்தில் பணிபுரிந்த வேணுகோபால சர்மா அவர் களின் பிற்காலச் சாதனையே இன்று நாம் கானும் திருவள்ளுவர் திருஉருவப் படம் புரட்சிக் கவிஞரின் முதல் தமிழ்த் திரைப்படம் காள மேகம். அதன் பாட்டுப் புத்தகத்தில் புதுவை பாரதிதாசன். என்று காணப்படுகிறது. ஒரு கவிஞரின் கதைக்கு மற்றொரு கவிஞர் உரையாடல், பாடல் எழுதியது சிறப்புக்குரியதுதானே! அவர் போன்றே அவர்தம் வழிவந்த உவமைக்கவிஞர் சுரதா அவர்கள் ஏழிசை மன்னர் டி.கே. தியாகராஜ பாகவதர் நடித்த அமரகவி எனும் படத்திற்கு உரை யாடல், பாடல் வரைந்து புகழ் பெற்றார். அடுத்து வந்த கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அம்பிகாபதி என்னும் கவிஞனின் கதைக்கு உரையாடலும்
பக்கம்:பாவேந்தரின் காளமேகம்.pdf/8
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை