பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பாவேந்தரின் பாட்டுத்திறன் சிந்தடியாகவும், குறளடியாகவும் வருவதுண்டு. ஆத்திசூடிகளில் வருவன அனைத்தும் குறளடி நூற்பாக்களே.

1. அனைவரும் உறவினர்

7. எழுது புதிய நூல்

13. கல்லாள் தலிவர்

இவை “பாரதிதாசன் ஆத்திச்சூடி"யில் கண்டவை.

1. அச்சம் தவிர்

31. செய்வது துணிந்துசெய்

38. ஞாயிறு போற்று

இவை பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி"யில் கண்டவை.

ஆத்திச்சூடியில் ஒவ்வோர்.அடியும் ஒரு தனிப்பாடலே. கவிஞர்கள் இருவரின் ஆத்திச்சூடியில் யாப்பமைப்பில் வேறுபாடு இல்லை.

23. சிந்துப் பாடல்கள்:“சிந்துக்குத்தந்தை!” என்று புதுமைக் கவிஞர் பாாதியாரைப் புதுவைக் கவிஞர் பாவேந்தர் பாராட்டுவார். இதனால் பாாதியார்தான் சிந்துப்பாடல்களை முதன்முதலாக உருவாக்கினார் என்று கொள்ளல் கூடாது. சிந்து வகைகளை சிறப்பாகவும், மிகுதியாகவும் கையாண்டவர் என்பதே இதற்குப் பொருளாகக் கொள்ளல் வேண்டும்.

சிந்துகள் இயற்றமிழ் பாக்கள் அல்ல; அவை இசைத்தமிழ்ப் பாக்கள். சிலப்பதிகாரக் காலத்தில் நாட்டுப்புற இலக்கியமாக அமைந்து மனம் வீசிய சிந்து வடிவங்கள் செவ்விலக்கியங்களில் இடம் பெறத் தொடங்கியது தேவார காலம். இவை சித்தர் காலத்தில் சிறப்புற வளர்ச்சி பெற்றன. பள்ளு குறவஞ்சி நாடகங்களில் நாடகத் தமிழாகி நடை பயின்றன. அண்ணாமலை ரெட்டியார் காலத்தில் வீறு பெற்று விளங்கின. வள்ளல் பெருமான் காலத்தில் எங்கும் பாடப்பெற்றன. இவ்வளவுக்கும் பிறகுதான் பாரதியார் இவ்வகைக்குப் பெருவாழ்வு அளித்தார்; பாவேந்தர் அதன் புகழ் பரப்பினார். அவர்தம் பல நூல்களில் இவ்வடிவம் கொஞ்சி விளையாடுகின்றது.

50. பா.தா.க. 2 புதுநெறி காட்டிய புலவன் - பக்கம் 72