பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி Y 99 கடுவெளிச் சித்தர் ஆனந்தக் களிப்பு” பாடியிருப்பினும் அவருக்குப் பின்னர் வந்த தாயுமான அடிகள் காலத்தில் அவர் பெயராலேயே தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு” என வழங்கியது. முன்னரே காவடிச்சிந்து இருந்தாலும் (வள்ளி கல்யாணக் காவடிச் சிந்து சிறப்பாக பாடிய காரணத்தால் அண்ணாமலை ரெட்டியார் பெயராலேயே “அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து” என்று பெயர் பெற்றது. இதுபோலவே பாரதியாரும் “சிந்துக்குத் தந்தை” என்று போற்றப் பெறுகின்றார்.

24. காவடிச் சிந்து முருகன் கோவிலுக்குத் தோளில் காவடி சுமந்து செல்லும்போது பாடும் பாட்டு காவடிச் சிந்து ஈடும் எடுப்புமற்ற காவடிச் சிந்துகளை முதல் முதலாகப் பாடியவர் அண்ணாமலை ரெட்டியாரே. பாவேந்தர் காவடிச் சிந்துகளைக் காதலித்துப் பல நூல்களிலும் பாடியுள்ளார்.

(எ-டு) தாழ்வென்றும் உயர்வென்றும்

சமூகத்தில் பேதங்கொண்டால் வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே

வாழ்வின்பம் உண்டாகுமோ? (3)

சேரிப் பறையர் என்றும்

தீண்டாதார் என்றும் சொல்லும் வீரர்தம் உற்றாரடி - சகியே

வீரர்தம் உற்றாரடி! (38) பாவேந்தரின் காவடிச் சிந்துகளில் சில தாள நடைகளுக்கு ஏற்றபடி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்பார் டாக்டர் இரா. திருமுருகன். இவை காவடிச் சுமப்போர் பாடுவதற்கு இயற்றப்பட்டவை அல்ல என்று இதற்குக் காரணமும் கூறுவர். பாரதியாரின் சிந்துகளிலும் இதே நிலைதான்.

பாவேந்தரின் “சுப்பிரமணியர் துதியமுது, கதர் இராட்டினப் பாட்டு, தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு, பாரதிதாசன் கவிதைகள் - 1, 3,

51. பாவேந்தர் வழியா? பாரதி வழியா? - பக்கம் 34