பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைத்திறன் Y 115

உதாரன் - அமுதவல்லியின் காதலைத் தோழியர் மூலம் அறிந்த

வேந்தன் இந்த உண்மையை மறைந்திருந்து காண முயன்று கன்னிமாடத்தருகே காத்திருக்கின்றான் - யாரும் அறியாமல்! வந்த உதாரன் அமுதவல்லிக்குக் கைலாகு தந்து, காதல் மொழிகளைப் பேசினதும், காத்திருந்த நங்கை வேல் விழியை வீசினதும், முத்தம் விளைத்த நடைமுறையையும் காண்கின்றான் காவலன்; கடுகடுக்கின்றான்.

மண்டையிலே கொட்டியது ஆயிரத்தேள்

போல மனமுளைந்து மாளிகைக்குச் சென்றான்’

என்று அரசன் கொண்ட சினத்தைக் காட்டுகின்றார். ஆயிரந்தேள் ஒரே சமயத்தில் கொட்டி மன உளைச்சல் தருவதுபோல் அரசன் துன்புறுகின்றான் என்கின்றார்.

காதலன் - காதலி உறவு மிகவும் அற்புதமானது. இளமையில் (ஏன் முதுமைக் காலத்தில் கூடத்தான்) ஒருவர் மற்றொருவர்பால் கொண்டிருக்கும் கவர்ச்சி இறைவனால் ஏற்படுத்தப்பெற்ற காதல் உணர்ச்சி. படைப்பு நடைபெறுவதற்கு ஆருயிர்களிடம் வழங்கப்பெற்ற அற்புத ஆற்றல், நாயக நாயகி உறவு ஆழ்வார் பாசுரங்களில் அற்புதமாகக் காட்டப்பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம். காதலர்களின் உடல் அழகுதான் முதன்மையானது. கண்ணம்மா என் காதலி - 6 என்ற பாட்டில் பாரதி கூறுவார்:

தோயுமது நீஎனக்கு - தும்பியடி நானுனக்கு வீணையடி நீளனக்கு - மேவும்விரல் நானுனக்கு வெண்ணிலவு நீஎனக்கு - மேவுகடல் நானுனக்கு

என்றெல்லாம் ஆசை மொழிகளை அடுக்கி மகிழ்கின்றார். புரட்சிக் கவியில் வரும் உதாரன்-அமுதவல்லியின் உறவும் இத்தகையதுதான். உதாரன் அமுதவல்லிக்குச் சித்திரித்த ஆணழகன். அமுதவல்லி உதாரனுக்கு மடமயில்.

5. புரட்சிக்கவி பக்கம் 26

9