பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைத்திறன் Y 149 நெய்யாலே மூண்டெழுந்த நெருப்பைப் போலே நெஞ்சாலே கொள்கின்ற விசையி னோடு வையாலே ஆனதொரு பகைமேற் செல்வோம்; வாளாலே தங்கள் புகழ் வளர்ப்போம்” என்பதாக, நெய் ஊற்றும்போது நெருப்பு மூண்டெழும்; அங்ஙனமே நெஞ்சாலே கொள்கின்ற விசையினோடு விரைவாகச் செல்வதாகக் கூறுகின்றான் இவன். உவமையை உணர்ந்து உளங்களிக்கச் செய்கின்றது கவிஞரின் வாக்கு.

புல்லூர்ச் சிறு குடிசையொன்றில் இரண்டு புண்பட்ட நெஞ்சங்கள் ஒன்றையொன்று தேற்றிக்கொண்டிருந்தன. ஒன்று நரைபட்ட ஆத்தாளின் நெஞ்சம். மற்றொன்று,

வல்லுறு குறிவைத்த புறாப்போல் வாழும் மலர்க்கொடியான் அன்னத்தின் உள்ளம்” அன்னத்தைக் குறிவைத்துக் கொல்லத் திட்டமிட்டிருக்கும் நரிக்கண்ணனுக்குப் புறாவைக் குறி வைத்திருக்கும் வல்லூறு உவமையாகக் காட்டப் பெற்றிருப்பது அற்புதம்; பொருத்தமான உவமை. ஆத்தா தங்கியிருந்த குடிசையை எதிரிகள் சூழ்கின்றனர். அப்போது குதிரைமேல் வந்த வேலன் பெருவாளுடன் பாய்வதைக் கவிஞர்,

பலகுதிரை மறவரின்மேல் வேலன் எட்டிப் பாய்த்தனன்பல் ஆடுகட்குள் வேங்கை போலே’ என்று காட்டுவார். வேங்கை ஆட்டுக் கூட்டத்திற்குள் பாய்வதுபோல் வேலன் பகைவர் கூட்டத்தில் பாய்ந்தான் என்று கூறுவதிலே வேலனின் வெற்றி குறிப்பாகக் காட்டப்பெறுகின்றது.

அடுக்கு உவமைகள்: சில இடங்களில் கவிஞர் உவமைகளை வரிசையாக அடுக்கி, கூறும் பொருளுக்கு முத்தாய்ப்பு வைப்பர்.

மாவடு வொத்தகண்ணாளை - இள வஞ்சிக் கொடிக்கினை யாளைத்

12. பாண்டியன் பரிசு - இயல் - 19 பக்கம் 36 13. பாண்டியன் பரிசு - இயல் - 20 பக்கம் 38 14. பாண்டியன் பரிசு - இயல் - 14 பக்கம் 46