பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 v. பாவேந்தரின் பாட்டுத்திறன்

உருவகங்களைக் காணலாம். கடல்” என்ற பாட்டில் கடலின்மீது காலைக் கதிரவன் செங்கதிர் வீசி எழுகின்றான். அந்தக் கதிரைத் “தங்கத் தூற்றல்’ என உருவகிக்கின்றார். கதிரவனை இளங்கதிர்ச் செம்பழம் என்கின்றார். “குன்றம்” என்னும் பாட்டில் குன்றின் மீதிருந்து இழியும் அருவிகளை (Waterfalls) “வயிரத் தொங்கலாகவும்”. அடர் கொடியை ‘பச்சைப் பட்டாகவும்”, குருவிகளைத் தங்கக் கட்டி'யாகவும் உருவகித்து மகிழ்கின்றார். இன்னும் குறத்தி கவண் எடுத்துக் குறிபார்க்கும் விழி “நீலப் பூவாகவும்” கவண்கல் எறியும் கை “செங்காந்தட்பூவாகவும்’, அவள் கையிலுள்ள உடுக்கை எழில் இடுப்பாகவும் உருவகித்துக் காட்டப் பெறுகின்றன. வான்” என்ற கவிதையில் கதிரவனைக் கிழக்குப் பெண் விட்டெறிந்த பரிதிப்பந்து” என்று உருவகம் செய்கின்றார். “இருள்” என்ற பாட்டில் இருளை ஒரு பெண்ணாக உருவகிக்கின்றார் கவிஞர். அவள் பகல் உடை தங்கச் சேலையாகவும்” உருவகிக்கப் பெறுகின்றன. அவள் தலையிலுள்ள குளிர்நிலா “வயிர வில்லை"யாக உருவகித்துக் காட்டப்பெறுகின்றது'தமிழ்” என்னும் பாடலில் தமிழ் கவிஞரின் ஆவியாகவும் (உயிர்), கருமான்செய் படைவீடாகவும், தன்னை ஒர் மறவனாகவும் உருவகித்துக் காட்டுகின்றார். முத்தாய்ப்பாகத் தமிழை ஒரு பூக்காடாகவும்” தன்னை ஒரு “தும்பியாகவும் உருவகித்து மகிழ்கின்றார். }

பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் பார்த்தன், பாஞ்சாலிக்கு பரிதியின் எழிலைக் காட்டும் பகுதியின் இறுதியில்,

பார்; சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில் எத்தனை தீப்பட் டெரிவன: ஒகோ! என்னடி இந்த வன்னத்தியல்புகள்! எத்தனை வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்! - செழும்பொன் காய்ச்சி விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே எரித்திடும் தங்கத் தீவுகள்:- பாரடி! நீலப் பொய்கைகள்!-அடடா, நீல வன்ன மொன்றில் எத்தனை வகையடீ!