பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாவேந்தரின் பாட்டுத்திறன்

எழுத்தமலர்க் கருநீலம் இருந்தில் காட்ட

இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட செழுந்தடநீர்க்கமலம் தீவிகைபோல் காட்டும்

திருக்கோவலூர் :கருநீலம் - கருநெய்தல் இருந்தில் - கரி; இரும்புன்னை - பெரிய புன்னை செம்பொன் - பசும்பொன் தடம் தடாகம், கமலம்தாமரை தீவிகை - விளக்கு)

திருக்கோவலூரை ஒரு பொற்களரியாக உருவகப்படுத்தி வருணிக்கின்றார் ஆழ்வார். பொற்களரி-பொற்கொல்லரின் பட்டறை அங்கே கரிகள் கொட்டப் பெற்றிருக்கும்; பொன்களும் முத்துகளும் நிறைந்திருக்கும். தி பிரகாசித்துக் கொண்டிருக்கும். இங்கு கருநீல மலர்கள் கரியாகவும், புன்னை மொக்குகள் முத்தாகவும், புன்னைப் பூக்கள் பொன்னாகவும், தாமரை மலர்கள் நெருப்பாகவும் திகழ்கின்றன.

மேலும் அக்காட்சி,

கருங்கமுகு பசும்பாளை வெண்முத் தீன்று

காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத்

திருக்கோவலூர்.” (கமுகு- பாக்கு பசும்பாளை - பசிய பாளை, மரகதம் - பச்சை பவளம் - சிவப்பு: செருந்தி - சுரபுன்னை; மொட்டு - மொக்கு; அலர்த்தும் - மலர்த்தும்)

முத்து, பவளம் முதலிய சிறந்த பொருள்கள் பொழில்களினின்றும் வெளி வருகின்றன என்று சமத்காரமாக அருளிச் செய்கின்றார் ஆழ்வார்.

இனி, பாவேந்தரின் பாடல்களை நோக்குவோம். இங்கு இரண்டு விதமான வருணனைகளைக் காண முடிகின்றது. ஒன்று, போய்க்கொண்டே காட்சிகளை வருணிப்பது, மற்றொன்று நின்ற நிலையில் வருணிப்பது. 2. பெரி. திரு 210:3 3. பெரி. திரு 2-10:7